ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வடக்கூரில் அருள் பாலித்து கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஏப்ரல் 24 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை ,புண்ணியாக வாசனம், வாஸ்து சாந்தி பூஜையுடன் கும்பாபிகேஷ விழா தொடங்கியது.
தொடர்ந்து கும்ப அலங்காரம், வேதிகை பூஜை, யாகசாலை பூஜை, கோமங்கள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 25ம் தேதி காலை 9.00 மணி அளவில் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாஹுதி, தீபாராதனை அருட்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை)நான்காம் கால யாகசாலை பூஜையுடன் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜையுடன், ஹோமங்கள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் , முழங்க ,மேளதாளத்துடன் கடம் புறப்பாடு கோவிலை வலம் வந்து ஶ்ரீதிரிபுரசுந்தரி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் உள்ள கும்பத்தில் மகா புனித நீர் ஊற்றப்பட்டது.
பின்பு மூலவரான ஸ்ரீதிரிபுரசுந்தரி பத்திரகாளி அம்மனுக்கு தயிர், பஞ்சாமிர்தம்,பால், சந்தனம், குங்குமம், விபூதி , திரவியம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது .
இதன்பின்னர் பரிவார தெய்வங்களான விநாயகர், ஸ்ரீ திரிபுர சுந்தரேஸ்வர், ஸ்ரீதேவி, ஶ்ரீ பூதேவி சம்மேத பெருமாள் , ஸ்ரீ வள்ளி, ஶ்ரீ தேவசேனா கல்யாண முருகன்
ஸ்ரீ பைரவர், ஶ்ரீ ஆஞ்சநேயர்,நவக்கிரகங்கள்,ஸ்ரீகருப்பண சாமி மற்றும் கொடிமரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷே விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.