அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருது கொடுக்க வேண்டும் என்றால் அதை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தான் கொடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது :
அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது புகார் வந்தவுடன், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.
குற்றச்சாட்டு இருந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தவர் தற்போதைய முதலவர் மு.க.ஸ்டாலின்.
அமைச்சர் செந்தில் பாலாஜி துணிச்சலான மனிதராக இருந்தால் தன்மீது தவறு இல்லை என சட்டப்படி நிரூபிக்க வேண்டும் அதை விட்டுட்டு நெஞ்சுவலி என கதறி அழுவது சரியல்ல,
வெறும் 30% அடைப்புக்கு ஆஞ்சியோகிராம் செய்தது உலகிலேயே இங்கேதான் இன்றைக்கு தவறு செய்தவர்கள் நாளை நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருது கொடுக்க வேண்டும் என்றால் அதை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தான் கொடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் .