கச்சத்தீவு விவகாரத்தில் 50 ஆண்டுகளாக தொடர்ந்து உண்மைக்கு புறம்பான பிரச்சாரம் (nirmala sitharaman) மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை பல்லாவரத்தில் தனியார் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை தொடர்பான விஷயங்களை தேர்தலுக்காக மட்டுமல் அல்ல; எப்போது வேண்டுமானாலும் பேசலாம். கச்சத்தீவு தொடர்பாக 50 ஆண்டுகளாக உண்மைக்குப் புறம்பான பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மீனவர்கள் வாழ்க்கையின் அங்கமான கச்சத்தீவு நமது பொருளாதார மண்டலத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கச்சத்தீவு குறித்து பேசக்கூடாது என்று எப்படி சொல்ல முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:-
நேரு கச்சத்தீவை ஒரு தொல்லை என்றும், இந்திரா காந்தி கச்சத்தீவை ஒரு சிறிய பாறை என்றும் தெரிவித்துள்ளனர். கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்து 1974-ல் வெளியுறவு செயலாளர் விரிவாக எடுத்துக் கூறியும், இதற்கெல்லாம் அப்போதைய முதல்வர்கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்துவிட்டு, இன்று திமுக கூட்டணிக் கட்சியினர் பொய் பிரச்சாரம் மட்டுமே செய்கின்றனர்.
தேர்தலுக்காக மட்டும் அல்ல. தேர்தல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சொல்ல வேண்டிய விஷயம் இது. தமிழக மக்களுக்கு கச்சத்தீவு குறித்த உண்மை தெரிய வேண்டும்.
Also Read : https://itamiltv.com/kodaikanal-solar-observatory-completes-125-years/
இந்த விவகாரத்தில் 10 ஆண்டுகளாக மத்திய அரசு என்ன செய்தது என கேட்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் கச்சத்தீவு தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரணைக்கு வந்தால்தானே இதைப்பற்றி பேச முடியும்.
பா.ஜ.க தலைமை எப்போது தீர்மானிக்கிறதோ அப்போது நான் தேர்தலில் போட்டியிடுவேன். தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு பணம் வருகிறது. ஏன், திமுகவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் பணம் வரவில்லையா? அதுவும் ஒரே நபரிடம் இருந்து அவ்வளவு பணம் கிடைக்க, அவர்களுக்குள் என்ன கொடுக்கல் வாங்கல்?
சென்னைக்கு சிறப்பு நிதியாக ரூ.5,000 கோடி வழங்கியிருந்தோம். வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் தமிழகத்துக்கு ரூ.900 கோடி வழங்கப்பட்டது. இந்த நிதியை என்ன செய்தது தமிழக அரசு? அதற்கு முறையான கணக்கு கூற வேண்டும். ரூ.5,000 கோடியில் 90 சதவீதம் செலவழித்து மழைநீர் வடிகால் பணிகளை செய்ததாகக் கூறினர். ஆனால் மழைவெள்ளத்தில் பாதிப்பு ஏற்பட்டது. பாதிப்புக்குப்பின் 90 சதவீதம் பணிகள் முடியவில்லை என்றனர்.
போதை பொருள் விவகாரத்தில் தமிழகத்தின் நிலையைப் பார்த்தால் கண்ணீர் வருகிறது. குஜராத்தில் (nirmala sitharaman) மட்டும் தானா போதை பொருள் கைப்பற்றப்படுகிறது? தமிழகத்தின் ராமேசுவரத்தில் போதைப் பொருட்கள் கைப்பற்றப்படவில்லையா? இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.