2024-25ம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்; புதிய நாடாளுமன்றத்தில் (budget presentation) தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட்டில் ஓர் ஆண்டுக்கான முழு பட்ஜெட் இடம்பெற்று இருந்தாலும், அது அடுத்த அரசு அமையும் வரை சில மாதங்களுக்கான நடப்புக் கணக்குகள், செலுத்த வேண்டிய வட்டி, ராணுவச் செலவினம் போன்ற செலவினங்கள் இடம்பெற்றிருக்கும்.
மீதம் இருக்கும் சில மாதங்கள் அரசை நடத்திடத் தேவையான வரவு-செலவுக் கணக்குக்கு ஒப்புதல் பெறுவது. விலைவாசி உயர்வால் அதிருப்தி அடைந்துள்ள மக்களை அமைதிப்படுத்துவது போன்ற அறிவிப்புகள் இடம்பெறும்.
முழு பட்ஜெட் என்பது முழு நிதியாண்டுக்கும் பொருந்தும்
ஒரு முழு பட்ஜெட் அரசின் வருவாய், செலவு, ஒதுக்கீடுகள் மற்றும் கொள்கைப் பிரகடனங்கள் உட்பட, அரசாங்க நிதியின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது
முழு பட்ஜெட் அந்த நிதியாண்டுக்கான வழிகாட்டியாக இருந்து, நாட்டின் பொருளாதாரப் பாதையை பட்டியலிடுகிறது
2024 ஜூலையில் புதிய அரசாங்கம் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்
இந்தியாவின் முதல் பட்ஜெட்டே இடைக்கால பட்ஜெட்தான்; ஆர்.கே.சண்முகம் செட்டியார் என்ற தமிழர்தான் அதைத் தாக்கல் செய்த நிதியமைச்சர்.
1947ல் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்ய இந்த இடைக்கால பட்ஜெட் (budget presentation) தாக்கல் செய்யப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புதிய அரசு மட்டுமே முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும்.
இடைப்பட்ட சில மாதங்களுக்கு அரசின் செயல்பாடுகள் தொய்வின்றி நடைபெற தேவையான நிதியை ஒதுக்கி அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் நடைமுறையே இடைக்கால பட்ஜெட்
இடைக்கால பட்ஜெட் புதிய ஆட்சி அமையும் வரையிலான இடைப்பட்ட சில மாதங்களுக்கு மட்டுமே பொருந்தும்
புதிய அரசாங்கம் உருவாகும் வரையில் அரசாங்கம் எதிர்பார்க்கும் வரவுகள் மற்றும் செலவுகளை இடைக்கால பட்ஜெட் கோடிட்டுக் காட்டும்
இடைக்கால பட்ஜெட் இடைப்பட்ட காலத்திற்கான நிதி விவரங்களை வழங்கும் தற்போது ஆட்சியில் உள்ள பாஜக அரசு 2024-25ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்.
Also Read : https://itamiltv.com/annual-day-function-by-february-10-in-government-schools/
அதன்படி 2024-25ம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் .
புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது .