2024ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானைச் சேர்ந்த அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அந்த வகையில், இந்த வருடத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் மருத்துவம், இயற்பியல், வேதியியல் , இலக்கியம் உள்ளிட்ட துறைகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் தற்போது அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு கிடைக்க போகிறது என்பதை அறிய அனைவரும் ஆவலாக இருந்த நிலையில் தற்போது இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Also Read : காதலித்து ஏமாற்றிய இளைஞர் – தக்க பாடம் புகட்டிய இளம் பெண்..!!
அதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடான்க்யோ அமைப்புக்கு வழங்கப்பட இருப்பதாக ராயல் ஸ்வீடிஷ் அகாடமி அறிவித்துள்ளது.
அணு ஆயுதங்கள் இல்லா உலகை உருவாக்குவதற்கு அந்த அமைப்பு எடுத்து வரும் முன்னெடுப்புகளை அங்கீகரிக்கும் விதமாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.