இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வந்த ரத்தன் டாடா உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமான நிலையில் தற்போது டாடா அறக்கட்டளைத் தலைவராக ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ரத்தன் டாடா நேற்று முன் தினம் தனது 86 ஆவது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் அவரின் மறைவுக்கு பலரும் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்தனர்.
Also Read : தீபாவளிக்கு அதிரடியான காம்போ ஆஃபர்களை அறிவித்த ஆவின்..!!
இந்நிலையில் ரத்தன் டாடாவின் மறைவுக்கு பின் டாடா குழுமத்தின் தலைவராக யார் இருக்க போகிறார் என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது டாடா அறக்கட்டளைத் தலைவராக ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.
ரத்தன் டாடாவின் மறைவைத் தொடர்ந்து, மும்பையில் நடைபெற்ற டாடா அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் நோயல் டாடா தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.