ரத்தன் டாடாவின் மறைவுக்குப் பின், டாடா அறக்கட்டளை தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டாலும், டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக நோயல் ஒருபோதும் நியமிக்கப்பட மாட்டார் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
டாடா குடும்பத்தில் மோதல்களை தடுப்பதற்காக இயற்றப்பட்ட விதியின் படி, ஒரு நபரை ஒரே நேரத்தில் டாடா அறக்கட்டளைக்கும், டாடா சன்ஸ் குழுமத்துக்கும் தலைவராக நியமிக்க முடியாது என 2022ல் ரத்தன் டாடா ஒரு விதியை இயற்றினார்.
டாடா சன்ஸ் அனைத்து டாடா குழும நிறுவனங்களை உள்ளடக்கியது. டாடா சன்ஸ் நிறுவனத்தில் 66% பங்குகளை டாடா அறக்கட்டளை வைத்துள்ளது, இருப்பினும் குழும விவகாரங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் அதிகாரம் டாடா சன்ஸ் தலைவருக்கே உள்ளது.
எனவே, ஒருவர் ஒரே நேரத்தில் இரு பதவிகளையும் வகிக்கக்கூடாது என்ற இந்த விதியை இயற்றினார் ரத்தன் டாடா. இதன் காரணமாகவே டாடா அறக்கட்டளை தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டாலும், டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக நோயல் ஒருபோதும் நியமிக்கப்பட மாட்டார் என கூறப்படுகிறது.