தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு முதியோர் இல்லத்தையாவது கட்டுவதற்கான பணிகளை 6 மாதத்திற்குள் தொடங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநிலத்தின் பல கோயில் வளாகங்கள், பேருந்து நிலையங்களில் ஆதரவற்ற முதியவர்கள் தங்கியுள்ளனர். மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் படி மாவட்டம் தோறும் ஆதரவற்ற முதியோர் காப்பகம் அமைக்க உத்தரவிட வேண்டும் என பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.
Also Read : நெல்லை அருகே 3 வயது சிறுவன் கொலை – கைதான எதிர்வீட்டுப் பெண்..!!
சட்டப்படி மாவட்டத்தில் ஒரு முதியோர் இல்லமாவது அரசால் நடத்தப்பட வேண்டும். தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களால் இத்தகைய இல்லங்கள் நடத்தப்படுவது விதிமீறும் செயல் என நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரிய கெளரி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.