விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற இருக்கும் தேதி மற்றும் இடம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் உச்ச நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் . உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர் இளம் வயதில் இருந்தே ஏராளமான சமூக நலன் சார்ந்த காரியங்களில் அதீத கவனம் செலுத்தி தொண்டாற்றி வந்தார்.
இதை தவிர நீட் தேர்வால் முதலில் உயிரிழந்த மாணவி அனிதாவின் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தியதுடன் அன்று முதல் இன்று வரை நீட் தேர்வுக்கு எதிரான தனது கருத்தை கிடைக்கும் இடங்களில் தைரியமாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்து வருகிறார்.
இந்நிலையில் ஒரு நாள் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ளதாகவும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் களமிறங்க உள்ளதாகவும் இதற்கு மேல் நடிக்க போவதில்லை என்று நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது அரசியல் என்ட்ரியை கெத்தாக அறிவித்தார்.
Also Read : பாரிஸ் பாராலிம்பிக் போட்டி இன்று தொடக்கம்..!!
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் தனது கட்சி கொடியையும் கட்சிக்கான ஆன்தம் பாடலையும் விஜய் அறிவித்தார்.
இந்நிலையில் த.வெ.க கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகளை எதிர்பார்த்து அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் செப். 23ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
மாநாட்டுக்கு அனுமதி கோரி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ள புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.