உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ( kallazhagar festival ) கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வின் போது ஒரு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் ஒவ்வரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகளவில் மிக பிரபலமானது .கோலாகலமாக நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி பக்க்தர்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெறும்.
நேற்று முன்தினம் மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்ற நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா பக்தர்கள் புடைசூழ இன்று அதிகாலை கோலாகலமாக நடைபெற்று முடிந்தது .
Also Read : மலேசியாவில் ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : 10 பேர் உயிரிழப்பு
இந்நிலையில் மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா நடந்த பகுதியில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
மதுரை ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக், சிவகங்கை திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த சோனைக்கு கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்தியதில் சோனை உயிரிழந்தார்.
கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கொடுத்து வருகின்றனர் ,
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் போலீசார் நடத்திய (kallazhagar festival) முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை, முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.