திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான ஜல்லி தயாரிக்கும் கிரஷர் இயங்கி வருகிறது.
இன்று காலை 10 மணியளவில் காட்டம்பட்டியில் இருந்து கிரஷருக்கு பயன்படுத்தும் சிலிண்டரை டெம்போவில் ஏற்றி வந்துள்ளனர்.
வாகனத்தை இயக்கிய வந்த தாசநாயக்கன் பாளையத்தை சேர்ந்த ஓட்டுநர் சதீஷ் வண்டியில் இருந்து சிலிண்டர்களை இறக்கிக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு சிலிண்டர் வெடித்ததில் ஓட்டுநர் சதீஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் கிரஷரில் மேற்பார்வையாளராக பணியாற்றிய பெருமாள் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சின்னசாமி என்பவர் மற்றும் ஓட்டுநர் சதீஷ் உடன் வந்த மற்றொரு நபரும் பலத்த காயங்களுடன் சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சிலிண்டர் வெடித்ததில் அருகே இருந்த கட்டிடங்களிலும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் லாரியில் உள்ள நிலையில் ஒரே ஒரு சிலிண்டர் மட்டும் வெடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.