சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை (onion price) குறைந்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படும் காய்கறிகள் அங்கிருந்து பல பகுதிகளுக்கு மொத்த விற்பனைக்காவும், சில்லை விற்பனைக்காகவும் வியாபாரிகளால் வாக்கிச் செல்லப்படுகிறது.
இந்த கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அவ்வப்போது ஏற்படும் மழை வெள்ளம், பனி உள்ளிட்ட காலநிலை காரணங்களினால் காய்கறிகளின் வரத்து குறைவு ஏற்படும். இதனால் காய்கறிகளின் விலையும் அதிகரிக்கும்.
அந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தைக்கு வெங்காயத்தின் வரத்து (onion price) அதிகரித்து உள்ளதால் விலையானது சரிந்துள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.
பெரிய வெங்காயம் ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
வெங்காயத்தின் வரத்து அதிகரித்து உள்ளதால் விலையானது சற்று சரிந்துள்ளது.
அதே போல் பீட்ரூட், வெண்டைக்காய் மற்றும் கேரட் வரத்து குறைந்ததையடுத்துள்ளது. இதனால் இதன் விற்பனை விலை அதிகரித்துள்ளது.
தக்காளி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு 30 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கேரட் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
முருங்கைக்காய் 80 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 40 ரூபாய்க்கும் பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், விற்பனையாகிறது.
இதையும் படிங்க : bhagyaraj: குழந்தையை முதலையிடம் கொடுத்த தாய்! -பாக்யராஜ் பகீர் வீடியோ
பீன்ஸ் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
https://x.com/ITamilTVNews/status/1758100181893939299?s=20
வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.