திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செபதம்பார் மாதத்திற்கான தரிசன டிக்கெட் ஆன்லைனில் ( Tirupati temple Online Tickets ) வெளியிட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
உலக பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெரும்பாலான பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப நடைபாதை வழியாக திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்வது வழக்கம்.
தினம்தோறும் ஏரளமான பக்தர்கள் நம்பிக்கையுடன் தங்கள் வாழ்வில் சிறக்க வேண்டும் என்று திருப்தி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வரக்கூடிய பக்தர்கள் இலவச தரிசனத்தில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க பல கோரிக்கைகள் வைக்கப்பட்டு
வருகிறது .
இருப்பினும் ஏழை எளிய மக்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
Also Read : மோடி ஆட்சியில் ரயில் விபத்துகள் அதிகரிப்பு – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
இந்நிலையில் செப்டம்பர் மாதம் ஆர்ஜித சேவைகளில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் குலுக்கல் முறையில் தங்களின் டிக்கெட்டுகளை ஆன்லைன் முலம் முன்பதிவு செய்து கொள்ள இன்று (18-ம் தேதி) காலை 10 மணி முதல் 20-ம் தேதி காலை 10 மணி வரை தேவஸ்தானம் வாய்ப்பு வழங்கியுள்ளது.
அதன்படி முன் பதிவு செய்துகொண்டவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு தொலைபேசி மூலம்குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படும்.
ஆர்ஜித சேவைகளான ஆர்ஜித பிரம்மோற்சவம், கல்யாணஉற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப அலங்கார சேவை போன்றவற்றில் பங்கேற்க விரும்புவர்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து ஏழுமலையானை ( Tirupati temple Online Tickets ) தரிசிக்க வருமாறு திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது .