நடிகை அமலா பாலுக்கு (amala paul), கேரள கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இறுதியில் கோயிலுக்கு எதிரே உள்ள சாலையில் இருந்து இறைவனை தரிசனம் செய்ய நேரிட்டதாக அமலா குறிப்பிட்டுள்ளார்.
மலையாள நடிகை அமலா பால் (amala paul) கேரளாவில் உள்ள திருவைராணிகுளம் மகாதேவர் கோவிலுக்குள் செல்ல அவர் பின்பற்றும் மதம் காரணமாக அவரை அனுமதிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவின் எர்ணாகுளத்தில் அமைந்துள்ள இந்த கோவிலில் இந்துக்கள் மட்டுமே கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மதத்தால் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அமலா பாலுக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நடிகை அதிருப்தி அடைந்திருப்பதாக குறிப்பிப்ட்டுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை அமலா பால் கோயிலுக்குச் சென்றுள்ளார். ஆனால், அவர் கோயில் அதிகாரிகளால் தெய்வத்தை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. மேலும், கோவிலுக்குள் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக அவர்கள் கூறியதாக நடிகை கூறியுள்ளார்.
இந்நிலையில், கோவிலின் பார்வையாளர் பதிவேட்டில் அவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், அவர் நாட்டில் இன்னும் பாகுபாடு இருப்பதை அறிந்து கொள்வது வருத்தமாக இருக்கிறது என்றும்,
2023-ல் மதப் பாகுபாடு இன்னும் நிலவுகிறது என்பது வருத்தமும் ஏமாற்றமும் அளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், என்னால் தேவியின் அருகில் செல்ல முடியவில்லை, ஆனால் தூரத்திலிருந்து அவரின் அருளை உணர முடிந்தது. மதப் பாகுபாடுகளில் விரைவில் மாற்றம் வரும் என்று நம்புகிறேன். நேரம் வரும், அப்போது நாம் அனைவரும் சமமாக நடத்தப்படுவோம் என்று அமலா பால் கோவில் பார்வையாளர் பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளார்.