சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன் கூறியதாவது :
அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு நோக்கி நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி நிலவி வருகிறது.
Also Read : ஈ.சி.ஆர் சாலையில் பாரம்பரிய பூங்கா அமைக்கும் தமிழ்நாடு அரசு..!!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைய வாய்ப்பில்லை. காற்றழுத்த தாழ்வுப்பகுதி மெதுவ்க நகர்ந்து கரையை கடக்கும்.
தென்மேற்கு வங்க்கடல், ஆந்திரா கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். வடகிழக்கு பருவமழை ஒரு சதவீதம் அதிகம் பெய்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.