கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இன்று (நவ. 01) கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 2 மாவட்டங்களில் இன்று (நவ.01) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
Also Read : வேட்டையன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது..!!
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய 25 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பருவ மழை தொடங்கி பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை வெளுத்துவாங்கி வரும் நிலையில் இன்று மேற்கண்ட 25 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.