தமிழ்நாட்டுக்கு அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறிருப்பதாவது :
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பத்தூர், சேலம், தருமபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு இன்று (நவ.21) வாய்ப்பு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.