அமெரிக்காவில் வேட்டைக்கு சென்ற இடத்தில், உரிமையாளரை வளர்ப்பு நாய் சுட்டு கொன்ற (killed by dog) வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவில், வளர்ப்பு நாயுடன் வேட்டையாடச் சென்ற ஒரு நபர், காரின் பின்புறத்தில் இருந்த துப்பாக்கியை செல்லப்பிராணி மிதித்ததால், தற்செயலாக சுட்டுக் கொல்லப்பட்டதாக சம்னர் கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், அவர் சென்ற பிக்கப் டிரக்கின் பின் இருக்கையில் இருந்த துப்பாக்கியை அவரது வளர்ப்பு நாய் தவறுதலாக மிதித்த நிலையில், துப்பாக்கியிலிருந்து தோட்டா வெளியேற்றியதால் அவர் சுடப்பட்டதாக (killed by dog) தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரக்கின் முன் பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்த உரிமையாளரின் பின்புறத்தில் துப்பாக்கிச் சூடு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம், கிழக்கு 80வது தெருவின் 1,600 பிளாக்கில், விசிட்டாவிற்கு தெற்கே 45 மைல் தொலைவில் உள்ள ஒரு நாட்டுச் சாலையில் காலை 9.40 மணியளவில் அந்த நபர் ஒரு டிரக்கில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவரின் பெயர் வெளியிடப்படாத நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால், ஓட்டுநர் இருக்கையில் இருந்த அவர் உடல்ரீதியாக காயமடையவில்லை எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், உயிரிழந்த 30 வயதுடைய நபர் நாயின் உரிமையாளர்தானா என அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. “விசாரணை நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் முதற்கட்ட விசாரணையில் இது ஒரு வேட்டை தொடர்பான விபத்து என்று காட்டுகிறது” என்று ஷெரிப் அலுவலகம் ஒரு தனி அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.
மேலும், மனிதர்களை விட துப்பாக்கிகள் அதிகம் உள்ள அமெரிக்காவில் இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் மிகவும் பொதுவானவை. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் தரவுகளின்படி, 2021 இல் துப்பாக்கி விபத்துக்களில் 500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.