பெண்கள் ஆசிய கோப்பை( asia cup 2022 )கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில் இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடந்த லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலபரீட்சை செய்தன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் நிடா டார் சிறப்பாக ஆடி 37 பந்துகளில் 57 ரன்கலும் மருப் 32 ரன்கள் சேர்த்தனர். மேலும் இந்திய அணியின் தீப்தி சர்மா 3 விக்கெட்டும், பூஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி வீராங்கனைகள் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிக பட்சமாக கோஷ் 26 ரன்னும், ஹேமலதா 20 ரன்னும் சேர்த்தனர். மற்ற வீராங்கனைகள் சொர்ப்ப ரன்னில் வெளியேற இந்திய அணி சரிவை நோக்கி சென்றது
19.4 ஓவர் முடிவில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் பாகிஸ்தான் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் அரை சதம் கடந்த டார் பவுலிங்கில் 2 விக்கெட்டைகளை கைப்பற்றினார்.
இந்த போட்டியில் தோல்வியை தழுவினாலும் புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்திலுள்ளது. பாகிஸ்தானும் 6 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலுள்ளது. இந்த வெற்றியின் மூலம் உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் இந்தியாவை மூன்றாவது முறையாக வெற்றி கண்டுள்ளது.