உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது .
இம்முறை இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் 13-ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்துள்ளது .
இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரில் இன்று நடைபெறும் 22 வது லீக் போட்டியில் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் ஒன்றுக்கொன்று மல்லுக்கட்ட உள்ளது . சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
2012ம் ஆண்டுக்கு பிறகு, அதாவது 11 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக்கத்தில் இன்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணி களம் காண்கிறது . மேலும் இதே மைதானத்தில், வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் தென்னாப்பிரிக்காவை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது.
இதற்கிடையில் இன்றைய போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் கூறியதாவது :
வரலாற்று ரீதியாக சென்னையில் பாகிஸ்தான் அணிக்கு நல்ல ஆதரவு இருந்துள்ளது . அதே ஆதரவு இன்றைய போட்டியிலும் எங்களுக்கு கிடைக்கும் என நம்புகிறோம் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் என இமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.