20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுக்கள் கடந்த ஞாயிற்று கிழமையுடன் நிறைவு பெற்றது. குரூப் 1 பிரிவிலிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
இதனை தொடர்ந்து அரை இறுதி போட்டிகள் நாளை புதன் கிழமை தொடங்கவுள்ளன.முதலாவது அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி நாளை ஆஸ்ட்ரேலியாவில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெறும். இது இந்தியா நேரப்படி பகல் 1.30 மணிக்கு தொடங்கும்.
நியூசிலாந்து அணியில் பேட்டிங், பவுலிங்க என அனைத்து பகுதியும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக முன் வரிசை பேட்ஸ்மேன் ஆலன், கான்வே, அணியின் கேப்டன் வில்லியம்சன் நல்ல ஃபார்மில் இருப்பது அந்த அணிக்கு பலமாக அமையும். மேலும் மத்திய வரிசையில் அதிரடி ஆட்டம் காட்டும் பிலிப்ஸ் அந்த அணியின் முக்கிய அம்சமாக உள்ளார்.
இந்த உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் பிலிப்ஸ் டாப் 4 இடத்தில் இருந்து வருவது அவரின் அதிரடியை குறிக்கிறது. பந்து வீச்சிலும் சுவிங் பந்து வீச்சாளர்கள் போல்ட், சவுதி மற்றும் சுழல் பந்து வீச்சிள் சான்ட்னர், சோதி பக்கபலமாக இருக்கின்றனர்.ஆனால் பாகிஸ்தான் அணியில் பாகிஸ்தான் படு மோசமாக உள்ளது. தொடக்க வீரர்கள் பாபர் – ரிஸ்வான் தான் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள்.
அவர்கள் ரன் குவிக்க தவறினால் அணி தடுமாறுகிறது. தொடக்கமே பாபர், ரிஸ்வான் இருவருமே ரன் குவிக்க தினருவது நியூசிலாந்து அணிக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.
இறுதியாக நடந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியிலும் பேட்ஸ்மேன்கள் போராடி தான் வெற்றி இலக்கை அடைந்தனர். மேலும் மத்திய வரிசையில் சடாப் கான் சற்று அதிரடியாக ஆடுகிறார். பந்து வீச்சிள் தற்போது எந்த பிரச்சனையும் இல்லை. இந்த இரு அணிகளும் அரை இறுதியைக் வென்று இறுதி போட்டிக்குள் செல்ல தீவிரம் காட்டும் என்பதால் ஆட்டம் மிக நெருக்கடியாக இருக்கும்.