பாகிஸ்தானுக்கு சுற்று பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. முதல் இன்னினக்ஸில் பாகிஸ்தான் 438 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அணியின் கேப்டன் பாபர் அசாம் 161 ரன்கள் அடித்தார். இவரை தொடர்ந்து சல்மான் 101 ரன்களும், சர்பராஸ் 86 ரன்கள் குவித்தார்.
இதனை தொடர்ந்து முதல் இன்னினக்ஸை தொடர்ந்த நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே பலமான பார்ட்னர்ஷிப் அமைத்து. தொடக்க வீரர் கான்வே, லாதம் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக ஆடிய லாதம் 113 ரன்கள் சேர்த்தார். கான்வே 92 ரன் குவித்தார். பின்னர் சேர்ந்த வில்லியம்சன்னுடன் ஜோடி சேர்ந்த மற்ற வீரர்கள் அணியின் ஸ்கோரை வேகமாக நகற்றினர்.
அபாரமாக ஆடிய வில்லியம்சன் இரட்டி சதம் விளாசினார், பாகிஸ்தான் அணிகக்கு எதிராக இவர் அடிக்கும் இரண்டாவது இரட்டை சதம் இதுவாகும். இதானல் நியூசிலாந்து அணி 612 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தானை விட நியூசிலாந்து 174 ரன்கள் முன்னிலை பெற்றது. 2 வது இன்னினக்ஸில் பேட் செய்த பாகிஸ்தான் தொடக்கமே தொடர்ந்து விக்கெட்டை இழந்தது.
அந்த அணியில் இமாம் – சர்பராஸ் மட்டும் நிலைத்து ஆடி வந்தனர். இமாம், சர்பராஸ் இருவரும் அடுத்தடுத்து வெளியேற. நியூசிலாந்து அமைத்த ரன்னை கடந்து லீட் கொடுக்க திணறியது. இறுதியில் நிதாமாக ஆடிய ஷகீல் அரை சதம் அடித்தார், இதனால் பாகிஸ்தான் மெல்ல ரன் சேர்க்க தொடங்கியது, 137 ரன்கள் முன்னிலை பெற்றபோது பாபர் அசாம் டிக்லர் செய்ய நியூசிலாந்துக்கு 138 ரன்கள் இலக்காக கொடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அதிரடி ரன் குவிப்பில் இறங்கியது, 14 ஓவர்களில் 138 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் தொடக்க வீரர்கள் லாதம், கான்வே அதிரடியை கையில்எடுத்தனர். சீராக ரன்கள் குவிய தொடங்கியது, இரு பேட்ஸ்மேன்களும் 20 போட்டியில் ஆடுவது போன்று பவுண்டரி, சிக்ஸர்கள் விளாசினார். 61 ரன்கள் குவித்த நிலையில் சட்டென சூழல் மாறியது, திடீரென வெளிச்சம் குறைந்து இருள் வர தொடங்கியது.
நடுவர்கள் சிறிது நேரம் ஆலோசித்த பிறகு விளையாடும் சூழல் இல்லாததால், ஆட்டம் டிராவாக அறிவிக்கப்பட்டது. இதனால் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் டிராவில் முடிந்தது.