உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தாக்கில் பயணிகள் பேருந்து கவிழ்ந்த கோர விபத்தில் தற்போது வரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் நைனி டண்டாவில் இருந்து ராம் நகர் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
Also Read : ‘UNCLE’ என அழைத்ததால் ஏற்பட்ட விபரீதம் – நண்பர்களுடன் புரட்டியெடுத்த நபர்..!!
இந்நிலையில் பேருந்து அல்மோரா மாவட்டத்தில் உள்ள மலைமீது சென்றுகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மலைச்சரிவில் சிக்கி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களின் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர் . இருப்பினும் இந்த விபத்தில் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதுமட்டுமின்றி படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.