திருச்சியில் 2 மணிநேரமாக வானில் வட்டமடிக்கும் விமானம் தரையிறங்க முடியாமல் தவித்து வருவதால் விமானத்தின் தற்போதைய நிலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சியில் இருந்து 141 பயணிகளுடன் ஷார்ஜா புறப்பட்ட விமானம், பறக்கத் தொடங்கியவுடன் சக்கரங்களை உள் இழுக்க முடியாமல் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
Also Read : அக்டோபர் 15ம் தேதி சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்..!!
புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தில் கோளாறு இருப்பதை கண்டுபிடித்த விமானிகள் மீண்டும் திருச்சியிலேயே தரையிறக்க திட்டமிட்டனர். இருப்பினும் தரையிறக்குவதில் சிக்கல் நீடிப்பதால் 2 மணிநேரத்திற்கு மேல் விமானம் வானில் வட்டமிட்டு வருகிறது.
தீப்பற்றுவதை தடுக்க எரிபொருள் குறைந்த பிறகு விமானத்தை தரையிறக்க விமானிகள் திட்டமிட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி விமான நிலையத்தில் 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள்
தீயணைப்பு வாகனங்களும் விமான நிலையத்தில் தயார் நிலையில் உள்ளன . இதுமட்டுமின்றி திருச்சி விமான நிலையத்திற்கு மருத்துவக் குழுவும் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.