மகாராஷ்டிராவில் பேருந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார் .
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா என்ற பகுதியில் அதிகாலை 2 மணி அளவில் 32 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்தின் டயர் திடீரென வெடித்ததில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உருண்டபடி கவிழ்ந்து திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி சுமார் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலை ஏற்பட்டுள்ள இந்த கோர விபத்தில் சிக்கி 25 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த கோர விபத்து குறித்த துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாகவும் . மேலும் இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தி உள்ளதாகவும்,பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் .
மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும். உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹50,000-மும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.