மக்களவை தேர்தல் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பரப்புரைக்காக வரும் பிரதமர் நரேந்திர மோடி( pmintn ) இன்று மீண்டும் தமிழ்நாடு வா உள்ளார்.
எதிர்வரும் மக்கள் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தற்போது தங்களது தேர்தல் பரப்புரைகளை தீவிரபடுத்தி உள்ளனர்.
இதில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தங்களது கட்சியில் இருக்கும் திரை பிரபலங்கள் ,பிரபல அரசியல் தலைவர்கள் என அனைவரும் மக்களிடம் நேரடியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் 15ஆம் தேதி இன்று பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள மீண்டும் ஒருமுறை தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளார் .
தமிழக மக்களின் வாக்குகளை பெறுவதற்காக 8-வது முறையாக இன்று தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, நெல்லை மாவட்டம் அகஸ்தியர்பட்டியில் நடக்க இருக்கும் பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.
Also Read : https://itamiltv.com/irans-retaliatory-attack-israel-refuses-to-retaliate/
இதற்காக, திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை 4:10 மணிக்கு அகஸ்தியர்பட்டிக்கு பிரதமர் வரவுள்ளார். மாலை 4:20 மணி முதல் 5:00 மணி வரை நடைபெறும் கூட்டத்தில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனைத்து (pmintn) கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் தேர்தலின் முடிவில் எந்த கட்சி வெற்றிபெற போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.