மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளையொட்டி ( memories of karunanidhi ) அவருடனான நினைவுகளை பகிர்ந்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 101ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் 3 தொகுப்புகள் கொண்ட கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து அண்ணா நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ’கலைஞர் நூற்றாண்டு நினைவலைகள்’ புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.
Also Read : ஹெட்ஃபோன் வெடித்ததில் சிதறிய காது – பாட்டு கேட்ட முதியவருக்கு நேர்ந்த சோக சம்பவம்..!!
இதனைத் தொடர்ந்து ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.மேலும் தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏழை எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101ஆவது பிறந்த நாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் கலைஞருடனான நினைவுகளை பகிர்ந்து பிரதமர் மோடி ட்வீட் போட்டுள்ளார்.
தனது நீண்ட காலப் பொது வாழ்க்கையில் தமிழ் மக்களுக்காகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் கலைஞர் கருணாநிதி பாடுபட்டார்.
தனது அறிவார்ந்த இயல்புக்காகவும் அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார் என ( memories of karunanidhi ) முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி உடனான நினைவுகளை பகிர்ந்து பிரதமர் மோடி உருக்கமான பதிவை போட்டுள்ளார்.