2 நாள் பயணமாக திருவனந்தபுரத்தில் இருந்து விமானத்தில் (PMINTN) கோவை விமானப்படை தளத்திற்கு வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமா் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக 2 நாட்கள் பயணமாக தனி விமானம் மூலம் திருவனந்தபுரத்தில் இருந்து தற்போது கோவை விமானப்படை தளத்திற்கு வந்தடைந்துள்ளார்.
இதையடுத்து சூலூா் விமானப் படை தளத்துக்கு வரும் பிரதமர் அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார் .
சாலை வழியாக பல்லடத்தில் உள்ள மாதப்பூருக்குச் செல்லும் பிரதமர் இருள் காணும் மாலையில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறாா்.
இந்நிகழ்ச்சியை முடித்த கையேடு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி மதுரை வந்தடைய உள்ளார்.
மதுரை வீரபாஞ்சானில் உள்ள டிவிஎஸ் லட்சுமி பள்ளியில் நடைபெறும் சிறு, குறு தொழில் முனைவோருக்கான கருத்தரங்கில் பிரதமர் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
இதையடுத்து இன்று இரவு மதுரை மண்ணில் பிரம்மியமாய் அமைந்துள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார் .
பிரதமரின் வருகை காரணமாக மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாலை 4.30 மணி முதல் பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மதுரையிலேயே இரவு ஓய்வெடுக்கும் பிரதமர் நாளை மற்ற சில அரச நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளார் .
பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு, நெல்லையில் இன்றும், நாளையும் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி ஏரளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு தொடர் தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ளனர்.
பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக தீவிர சோதனைகள் நடத்தி வருகிறது .
பாளையங்கோட்டையில் பொதுமக்கள், நீதிமன்றம் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்களுக்கு எவ்வித போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன .
Also Read : https://itamiltv.com/officers-deep-sleep-high-court-question/
பிரதமர் பங்கேற்கும் விழாவில் பங்கேற்க வருகை தரும் ((PMINTN) முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அனைவரும்
தங்களுடைய வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது .