தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் (Pollachi case) கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 9 பேரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்படுகின்றனர்.
கடந்த 2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிளைப் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது .
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து
சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹரோனிமஸ் பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கோவை மகளிர் நீதிமன்றத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை நீண்ட வருடங்களாக நடைபெற்று வருகின்றது.
இதையடுத்து இந்த வழக்கில் மேலும் பாதிக்கப்பட்ட பல பெண்கள் அடுத்தடுத்து புகார் கொடுத்து வந்ததால் இந்த வழக்கு மேலும் தீவிரமடைந்தது.
பின்னர் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது,
சிபிஐ தரப்பில், ஏற்கெனவே இந்த வழக்கில் கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், ஆனால் சில விளக்கங்களை நீதிமன்றம் கேட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சிபிஐயில் ஆட்கள் பற்றாக்குறையால், வழக்கு விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது
இந்த் வழக்கில் கடந்த ஒரு வருடமாக வீடியோ கான்பிரன்ஸிங்கில் விசாரணைக்கு 9 பேரும் ஆஜராகி வந்த நிலையில் , ஒரு வருடத்திற்கு பின்பு இன்று 9 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்தப்பட இருக்கின்றனர்.
கடந்த 2021 ம் ஆண்டு சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் அதில் கூடுதல் ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
Also Read : https://itamiltv.com/kalashetra-issue-chennai-hc-judgement/
சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களின் நகல்கள் கேட்டு ஒன்பது பேரும் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகின்றனர்.
இதையடுத்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட (Pollachi case) உண்மையான குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.