பொங்கல் தினத்தன்று அரண்மனை 4ம் பாகம் வெளியாவதில் சிக்கல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் திரை உலகில் சிறந்த இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்து வருபவர் சுந்தர் சி. பிரபல இயக்குனர் மணிவண்ணனின் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர் முறைமாமன்” என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 1995 ஆம் ஆண்டு இயக்குனராக அறிவுகமானார்.
அதனை “அருணாச்சலம்”, “நாம் இருவர் நமக்கு இருவர்” என பல திரைப்படங்களை இயக்கி உள்ளார். பல திரைப்படங்களில் கதையின் நாயகானாக நடித்து வரும் சுந்தர்.சி தானே இயக்கி அவரே நடிக்கவும் தொடங்கினார்.
அந்த வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அரண்மனை என்ற திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தை தொடர்ந்து, அரண்மனை திரைப்படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களை எடுத்திருத்தார். இந்த திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து நான்காவது பாகமான அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
இந்த திரைப்படத்தில் நடிகை தமன்னா மற்றும் ராசி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் அரண்மனை 4 திரைப்படம் வருகின்ற 2024 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா அன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் வரும் பொங்கல் பண்டிகையின் போது அயலான், கேப்டன் மில்லர், மற்றும் விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்மஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
அரண்மனை 4 திரைப்படம் வெளியாக உள்ள அதே நேரத்தில் வேறு படங்களும் வெளியாவதால், இது அரண்மனை படத்தின் நான்காம் பாக வசூலை பாதிக்குமோ என்ற நோக்கத்தில் அரண்மனை 4ம் பாகம் தாமதமாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில், பொங்கல் தினத்தன்று அரண்மனை 4 வெளியாகுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..
ஏற்கனவே வெளியான மூன்று பாகங்களும் பெரிய அளவில் போட்டியின்றி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகவுள்ள அரண்மனை பாகம் 4-ற்கு மிகப்பெரிய போட்டி நிலவுகிறது.