அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது தேமுதிக பொதுச்செயலாளர் (premalatha) பிரேமலதா விஜயகாந்த் திடிரென கண்கலங்கிய தருணம் அனைவரையும் சில நிமிடம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வாணாபுரம் பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார் அப்போது மக்கள் முன் உரையாற்றிய அவர் கூறியதாவது :
கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு நீங்க எல்லாம் வந்திருந்தீங்க. யாரும் கவலைப்படாதீங்க. விஜயகாந்த் விட்டுட்டு போயிட்டாரு என நினைக்காதீர்கள். உங்கள காக்க நாங்கள் இருக்கிறோம்.
நானும் என் இரண்டு மகன்கள் உங்களுக்காகவே இருப்போம். இனி ஒவ்வொரு தொண்டர்களுக்கும் என் வாழ்க்கையை அர்ப்பணிப்பேன். என கூறி பேசிக்கொண்டிருக்கும்போதே பிரமேலதா கண் கலங்கினார்.
Also Read : https://itamiltv.com/interrupting-an-inappropriate-relationship-one-and-a-half-year-old-child-death/
ரிஷிவந்தியம் வந்த எனக்கு தலைவர் விஜயகாந்த் வாழ்ந்த நாட்கள் தான் ஞாபகம் வருகிறது. கேப்டன் விஜயகாந்த் மக்களை சந்தித்து எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். விஜயகாந்த் மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பிறகு ரிஷிவந்தியம் மக்களை சந்திக்க வந்துள்ளேன்.
நான் எந்த தொகுதிக்கு சென்றாலும் தைரியமாக பேசுவேன். ஆனால் கேப்டன் விஜயகாந்த் (premalatha) வாழ்ந்த இந்த பூமியை நிச்சயமாக என்னால் மறக்க முடியவில்லை என மக்கள் முன் கண்ணீருடன் பேசியுள்ளார்.