விருதுநகர் மக்களவை தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தொடர் இழுபறி நடந்து வரும் நிலையில் ( continuous meditation ) விஜய பிரபாகரன் வெற்றிபெற வேண்டி பிரேமலதா விஜயகாந்த் , கேப்டன் நினைவிடத்தில் தொடர் தியானத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில் இன்று நாடு முழுவதும் வாக்கு என்னும் பணி வெற்றிகரமாக தொடக்கி நடைபெற்று வருகிறது.
சுமார் 140 கோடி மக்கள் தொகை கொண்ட நம் பாரத நாட்டில் அடுத்த 5 ஆண்டுகள் ஆளப்போவது யார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது EVM இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Also Read : ஆந்திராவில் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்திக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி
அந்தவகையில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் , காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர்.
இந்நிலையில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவை வரும் நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் அமர்ந்து அவரது மனைவியும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் தொடர் தியானத்தில் ஈடுபட்டு வருகிறார்.
விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் வெற்றி பெற்றால் விருதுநகர் மக்கள் முன் விஜய பிரபாகரின் ( continuous meditation ) திருமணம் நடைபெறும் என பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தின்போது தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.