டெல்லியில், தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் ஜனாதிபதி திரவுபதி முர்முவை (drarubathi murmu) இன்று சந்தித்து பேசினார்.
முதல்வர் மு.க ஸ்டாலின்- ஜனாதிபதி திரவுபதி முர்மு (drarubathi murmu) சந்திப்பின் போது கிண்டியில் அமையவுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை’ திறப்பு விழாவிற்கு முதல்வர் அழைப்பு விடுத்தார்.
முதல்-அமைச்சரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜூன் 5-ந் தேதி தமிழகம் வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜூன் 5-ந் தேதி கிண்டியில் உள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க இருக்கிறார்.
முன்னதாக, கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி, தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, “சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்” என அறிவித்திருந்தார்.
இதையடுத்து, சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1,000 படுக்கைகளுடன் கூடிய, சுமார் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் ரூ.230 கோடி செலவில் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
தற்போது, இந்த மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளது. எனவே, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜனாதிபதி திரவுபதி முர்முவை இந்த விழாக்களில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.
இந்தநிலையில் தான், முதல்-அமைச்சரின் அழைப்பினை ஏற்று ஜூன் மாதம் 5-ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்னை, கிண்டியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழா மற்றும் நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.