திருச்சி ஸ்ரீரங்கம் (Trichy Srirangam) கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் மோடி திருச்சிக்கு வருகை தந்துள்ளார்.
மத்திய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த போட்டியானது, இந்தாண்டு தமிழ்நாட்டின் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் நடை பெறுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை சென்னைக்கு வருகை தந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இரவு ஓய்வு எடுத்த பின் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சிக்கு புறப்பட்டு சென்றார்.
இதனை தொடர்ந்து , திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்கிறார்.
உத்தரபிரதேச அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், வரும், 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக, கடந்த 12-ம் தேதியில் இருந்து பிரதமர் மோடி விரதம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி, திருச்சி, ஸ்ரீரங்கம் ஆகிய கோவிலிலும் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
ராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலும், திருச்சி, ஸ்ரீரங்கம் கோவிலும் முக்கியத்துவம் வாய்ந்த புனிதத் தலங்களாக திகழ்கின்றன.
அதனால், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்கு முன் ராமேஸ்வரம் மற்றும் திருச்சி ஸ்ரீரங்கம் (Trichy Srirangam) கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
இதையும் படியுங்க: Headlines: இன்றைய தலைப்புச் செய்திகள்
இதற்காக இன்று திருச்சி வந்துள்ள பிரதமர் இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்யவுள்ளார்.
இதற்காக இன்று காலை 8:30 மணிக்கு திருச்சி சென்றடைந்த பிரதமர் மோடி, 11:00 மணிக்கு காரில், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றார்
அப்போது தெற்கு கோபுர வாயில் வழியாக நுழையும் பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கபட்டது. கருடாழ்வார், மூலவர், தாயார், சக்கரத்தாழ்வார், பட்டாபிராமர், கோதண்டராமர், ராமானுஜர் உள்ளிட்ட முக்கிய சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.
இதனை தொடர்ந்து கம்பராமாயண அரங்கேற்ற மண்டபத்தில் கம்பராமாயண பாராயணத்தை கேட்க உள்ளார்.
https://x.com/ITamilTVNews/status/1748592889545035778?s=20
பிரதமர் வருகையை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் கோயில், ராமநாதசுவாமி கோயில்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு கருதி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்ட்டுளது.
ஸ்ரீரங்கம் கோவிளில் சாமி தரிசனம் செய்த பின் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்டராமர் கோவிலுக்கு காரில் சென்று தரிசனம் செய்ய உள்ளார்.