தமிழகத்திற்கு 3 நாள் பயணம் மேற்கொண்ட (TN Travel) பிரதமர் நரேந்திர மோடி தற்போது பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லிக்கு திரும்பியுள்ளார் .
பாரத பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார்
முதலாவதாக சென்னைக்கு வந்த பிரதமர் மோடி சென்னையில் முதல் முறையாக நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் .
நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர் .
இதையடுத்து ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் ஓய்வெடுத்த பிரமர் மோடி மறுநாள் காலை 20ஆம் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி மாநகரத்திற்கு சென்றார் .
திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தந்தார்.
108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார்.
அங்கு சாமி தரிசனம் செய்த பின்பு மீண்டும் சாலை மார்க்கமாக புறப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்றார் .
(TN Travel) ஸ்ரீரங்கம், ராமேஸ்வரத்தை தொடர்ந்து தனுஷ்கோடி பகுதிக்கு இன்று பிரதமர் மோடி சென்றார்.
இதையடுத்து கோதண்டராமர் சுவாமி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்
அதன் பின்னர் , அரிச்சல் முனை பகுதிக்கும் சென்ற பிரதமர் மோடி அங்கு சில நிமிடம் நேரத்தை செலவு செய்தார்.
பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் சென்று, அங்கிருந்து இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு இன்று மாலை புறப்பட்டு சென்றார் .
பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்திற்கு முதல் முறை வருகை தந்ததால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் வருகையை ஒட்டி, ராமநாதசுவாமி கோயிலில் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது .
Also Read : https://itamiltv.com/captain-miller-approaching-100-crores/
இன்று நண்பகல் 12 மணி முதல் மாலை வரை அப்பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது
பாதுகாப்பு நலன் கருதி ராமேஸ்வரம் முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.
பிரதமர் தமிழகத்தில் கால் வைத்து மீண்டும் டெல்லிக்கு புறப்படும் வரை எந்த வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஏரளமான போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது .