சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் பிரதமர் மோடி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ நடத்தினார்.
இந்த நிகழ்ச்சிக்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சாலையின் இருபுறமும் திரண்ட மக்கள் மற்றும் கட்சியினர் மலர் தூவி, கோஷங்கள் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
புதுச்சேரியில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 2026 தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் இடஒதுக்கீடு செய்யப்பட்டது.
பல்வேறு கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
சென்னையிலிருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரி வந்த பிரதமரை முதல்வர் ரங்கசாமி மற்றும் கூட்டணி தலைவர்கள் வரவேற்றனர்.
பின்னர் அஜந்தா சந்திப்பில் இருந்து தொடங்கிய ரோடு ஷோ, அண்ணா சாலை வழியாக நடைபெற்றது. பிரதமருடன் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் வாகனத்தில் இருந்தனர்.
மக்கள் பாரத் மாதா கி ஜே என முழக்கமிட்டு, மாடிகளில் இருந்து மலர் தூவி வரவேற்றனர். வழியெங்கும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த ரோடு ஷோ நேரு வீதியில் நிறைவடைந்தது. பின்னர் பிரதமர் விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை திரும்பினார்.
