மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ஜேம்ஸ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
கன்னட திரையுலகில் செல்வாக்கு பெற்ற நடிகராக வலம் வந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார். அவருக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
புனீத் ராஜ்குமார் நடிப்பில் கடைசியாக உருவாகி வந்த சில படங்களின் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த வகையில் சேத்தன்குமார் இயக்கி வரும் ஜேம்ஸ்’ என்ற படத்திலும் புனீத் ராஜ்குமார் நடித்து வந்தார். இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிய ஜேம்ஸ் படத்தில் புனீத் ராஜ்குமாருக்கு அவரது சகோதரர் சிவா டப்பிங் பேசியுள்ளார். இந்த நிகழ்வு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசர் முழுவதும் விறுவிறுப்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. புனீத் வழக்கம் போல இந்தப் படத்திலும் ஆக்ஷனில் அதிரடி காண்பித்துள்ளார். இப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் மார்ச் 17, 2022 அன்று வெளியாக உள்ளது.