தெலுங்கு சினிமாவில் என்ன தான் பல திறமையான நடிகர்கள் இருந்தாலும் அங்குள்ள படங்களுக்கு பெரிய அளவில் மவுசு இல்லாமல் உள்ளூர் ராஜாவாகவே இருந்து வந்தது . அப்படியே ஒரு சில நல்ல படங்கள் வந்தாலும் அது சரி இல்லை இது சரி இல்லை என வாய் நிறைய விமர்சனங்கள் வந்து குவிகிறது .
இப்படி அகல பாதாளத்தில் இருந்து வந்த தெலுங்கு சினிமாவை புஷ்பா என்ற படம் நாடு முழுவதையும் திரும்பி பார்க்க வைத்தது .
தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறக்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் செம மாஸாக உருவான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது மட்டுமில்லாமல் அவருக்கு சிறந்த நாயகன் என்ற தேசிய விருதையும் பெற்று தந்தது .
இதில் இன்னும் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தெலுங்கு சினிமாவில் தேசிய விருது பெறும் முதல் நடிகர் அல்லு அர்ஜுன் தான்.
சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு மிக பெரிய பட்ஜெட்டில் தயாராகி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் சுமார் 350 கோடிக்கு மேல் வசூல் செய்து தாறுமாறான பல சாதனைகளை படைத்தது .
இந்நிலையில் தற்போது இப்படத்தின் 2ம் பாகம் திட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறதாம். சத்தமின்றி காட்டுப்பகுதியில் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதில் தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் புஷ்பா படத்தின் 2ம் பாகம் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ளதாம் .
ஏற்கனவே முதல் பாகம் பல சாதனைகளை படைத்தது மட்டுமில்லாமல் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருதையும் பெற்று தந்துள்ளதால் இப்படத்தின் 2 ம் பாகம் மேல் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.