இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4வது ஆஷஸ்( Ashes ) போட்டி நேற்று நிறைவடைந்தது. தொடர்ந்து மூன்று நாட்களாக இடையூறு இல்லாமல் நடந்த போட்டியில் 4ஆம் நாளில் மழை குறுக்கிட்டது. 4ஆம் நாள் தேநீர் இடைவேளையின் பொழுது தொடங்கிய மழை அன்று நாள் முழுவதும் பெய்தது. இதனால் அன்றைய நாள் ஆட்டம் சீக்கிரமாக முடிந்தது.
4ஆம் நாள் முடிவில் இங்கிலாந்து அணியின் நிலைமை சிறிது முன்னணியில் இருக்க, இறுதிநாள் நாள் போட்டியினை சிறப்பாக விளையாட இரு அணியினரும் முனைப்புடன் எதிர்நோக்கி இருந்தனர். போட்டியின் முடிவை தீர்மானிக்கும் இறுதி நாளான 5ஆம் நாளிலும் தொடக்கமே மழை பொழிவு தொடங்கியது. ஆரம்பத்தில் சிறிது மெதுவாக பெய்ந்த மழை நேரம் செல்ல செல்ல அதி கனமழையாக தீவிரமடைந்தது.
இரண்டு நாட்களாக பெய்த மழையால் மைதானத்தில் அதிகயளவில் மழை நீர் தேங்கியதால், மழை நீரை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் அதிக மழை பொழிவால் மைதானம் ஆடுவதற்கு ஏற்ப பதத்தில் இல்லாத காரணத்தால் இறுதி நாள் ஆட்டமும் கைவிடப்படுவதாக நடுவர்கள் தெரிவித்தனர். மேலும் 4 வைத்து டெஸ்ட் போட்டி டிரா செய்வதாகவும் அறிவித்தனர்.
இதனால் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 4 போட்டிகள் முடிந்த நிலையில் 2-1 கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றதுடன், ஆஷஸ் ( Ashes ) கோப்பையை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இறுதி நாள் போட்டியில் மழை பெய்யாமல் இருந்திருந்தால் இங்கிலாந்து அணிக்கு சாதகமாக அமைய அதிக வாய்ய்பு இருந்தது. இந்த முடிவினால் இங்கிலாந்து ரசிகர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
இந்த முடிவை நாங்கள் எதிர்பார்க்க வில்லை இருந்தாலும் மீதம் உள்ள ஒரு போட்டியையும் வென்று இந்த தொடரை சமன் செய்ய எங்கள் அணி தயாராக உள்ளதாக இங்கிலாந்து அணி தலைவர் பெண் ஸ்டோக்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.