தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கும் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது . பகல் நேரங்களில் வெயிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழையும் பெய்து வருகிறது.
மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழையும் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் அங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கும் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டின் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதே நிலை செப்டம்பர் 5ம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, சென்னை வானிலை மையம் வெளியிட்ட இன்னொரு அறிவிப்பில், இன்றைய தினம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.