ஏரளமான இளம் பட்டாளங்களுடன் சூப்பர் ஸ்டார் கேமியோ ரோலில் நடக்கும் லால் சலாம் படத்தில் இசை வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில் தனது குறித்து Aishwarya Rajinikanth பேசியிருப்பது தற்போது வைரல் ஆகி வருகிறது .
தமிழ் சினிமாவின் இளம் கதயநாயகர்கள் பட்டியலில் டாப் 10 இடத்திற்குள் இருபவர்க்ள விஷ்ணு விஷால், விக்ராந்த் .
இவர்களின் கூட்டணியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அன்புமகளான ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படமே ‘லால் சலாம்’
கிரிக்கெட்டை மைய்யமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் கேமியோ ரோலில் நடித்துள்ளார் .
இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் வேகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. அழகான விண்டஜ் காரில் கெத்தாக வந்து இறங்கிய சூப்பர் ஸ்டாரை அனைவரும் கரவோசம் எழுப்பி வரவேற்றனர் .
இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் பேசிய Aishwarya Rajinikanth கூறிருப்பதாவது :
ரஜினிகாந்தை சங்கி என விமர்சிக்கிறார்கள்; அதனை கேட்டதும் எனக்கு வருத்தமாக இருந்தது
ரஜினி ஒரு சங்கியாக இருந்தால் `லால் சலாம்’ படத்தில் நடித்திருக்க மாட்டார்; சங்கியால் இந்த படம் பண்ண முடியாது.
இந்த படத்தில் அவ்வளவு தைரியமாக யாருமே நடித்திருக்க மாட்டாங்க அவரை தவிர
நீங்கள் எந்த மதமாக இருந்தாலும் இந்த படம் உங்களை க பெருமைப்படுத்தும் .
ரஜினிகாந்த் நிச்சயமாக சங்கி இல்லை என இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த உருக்கமாக பேசியுள்ளார்.
Also Read : https://itamiltv.com/the-1st-day-collection-of-singapore-salon/
அவரை தொடர்ந்து பேசிய கவிஞர் சினேகன் கூறியதாவது :
இந்த பிரம்மாண்ட மேடையில் நான் நிற்க காரணம் ஏ.ஆர்.ரஹ்மான்தான்; ‘லால் சலாம்’ திரைப்படத்திற்கு பாட்டு வேண்டும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் கேட்டதும் உடனடியாக ஓகே சொல்லிவிட்டேன்.
3,000 பாடல்கள் எழுதியும் ரஜினிகாந்துக்கு எழுத முடியவில்லையே என்ற ஏக்கம் இந்த படம் மூலம் நிறைவேறியது என கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.