இந்தியாவில் இருக்கும் ஒரு சில பெண் இயக்குநர்களில் ஒருவராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரு மகள்களும் உள்ளனர் . இதில் இவரது மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் தற்போது முழுவீச்சில் உருவாகி வரும் படம் தான் லால் சலாம் .
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செல்ல மகளுக்காக கேமியோ ரோலில் நடிக்கும் ரஜினி சம்பந்தமான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வருவதாக கூறப்படுகிறது . அதற்கேற்ப இப்படத்தில் கதையின் நாயகர்களாக விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் நடித்து வருகிறார்கள். அவர்கள் இருவருமே நிஜத்தில் ஸ்டேட் கிரிக்கெட் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் காட்சிகளை பார்த்து பார்த்து படமாக்கி வருகிறார் ஐஸ்வர்யா. தந்தையை முதல் முறை இயக்குவதால் ரஜினி நடிக்கும் மொய்தீன் பாய் கதாபாத்திரம் செம மாஸ் ஆக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் லால் சலாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் கெட் அப்பில் நடந்து சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ஒன்று வெளியாகி இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
ரஜினி அவருக்கே உரிய பாணியில் செம ஸ்டைலாக நடந்து செல்லும் அந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் வழக்கம் போல் அதனை வைரலாக்கி வருகின்றனர் .
இதோ தலைவரின் வைரல் வீடியோ..