சங்கி (Sanghi) என்பது கெட்ட வார்த்தை என்று எங்கும் கூறப்படவில்லை என சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியின் போது, ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ‘3’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தை தொடர்ந்து வை ராஜா வை என்ற திரைப்படத்தை ஐஸ்வர்யா இயக்கி இருந்தார்.
தற்போது ‘லால் சலாம்’ என்ற திரைப்படத்தை இவர் இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ் நடித்துள்ளார்.
மேலும் நிரோஷா, செந்தில், தம்பி ராமையா உள்ளிட்ட துணை நடிகர்களும் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்றது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள், பிரபலங்கள், நட்சத்திரங்கள் என பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந் எனது அப்பா ரஜினியை சமூக வலைத்தளங்களில் சங்கி (Sanghi) என விமர்சிக்கிறார்கள், அதனை கேட்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது.
ரஜினிகாந்த் ஒரு சங்கியாக இருந்தால் லால் சலாம் போன்ற ஒரு படத்தில் நடித்திருக்க மாட்டார். சங்கியால் இந்த மாதிரியான படங்களில் நடிக்க முடியாது.
இதையும் படிங்க : Thanjavur-ரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
லால் சலாம் படத்தில் ரஜினியை தவிர அவ்வளவு தைரியமாக யாரும் நடித்திருக்க மாட்டார்கள். அதனால் சொல்கிறேன் ரஜினிகாந்த் நிச்சயமாக சங்கி இல்லை” என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கடப்பாவில் தொடங்கவிருக்கும் வேட்டையன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
“சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை” – நடிகர் ரஜினிகாந்த்
அப்போது அவரிடம் லால் சலாம் படம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பத்தில் அளித்த அவர், “லால் சலாம் படம் நன்றாக வந்திருக்கிறது. மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் படமாக இருக்கும்”.
சங்கி’ என்பது ஒரு கெட்டவார்த்தை என்ற அர்த்தத்தில் ஐஸ்வர்யா எங்குமே பேசவில்லை. அப்பா ஒரு ஆன்மிகவாதி, எல்லா மதங்களையும் விரும்புபவர், அவரை ஏன் இப்படி சொல்கிறார்கள் என்பதே அவருடைய பார்வை என தெரிவித்தார்.