கோடான கோடி பக்தர்களின் தியாகம் மற்றும் தவத்தின் பலனாய், பல தலைமுறைகளின் கனவு இன்று நிறைவேறி உள்ளது . (Ramar Statue) புதிய வரலாறு எழுதப்பட்டிருக்கிறது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
ராமர் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்தியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோயில் திறப்பு விழாவுக்கான பூஜைகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கின. 6 நாட்களாக பல்வேறு பூஜைகள் நடந்த நிலையில், 7ஆவது நாளான இன்று நடைபெற்றது.
மிகவும் நல்ல நேரமான 12 மணி 29 நிமிடங்கள் முதல் 12 மணி 30 நிமிடங்களில் இந்த நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பால ராமர் சிலை பிரதிஷ்டை இன்று செய்யப்பட்டது.
(Ramar Statue) பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி முதலில் பூஜை செய்தார். அப்போது ராம பஜனை பாடல்கள் பாடப்பட்டன.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்டு நிலையில் ஏராளமானோர் இதனை கண்டு களித்தனர் .
அரசியல் தலைவர்கள் திரைபிரபலன்கள் என பலரும் நேரில் சென்றும் தொலைக்காட்சியின் மூலம் ராம தரிசனம் பெற்றனர்.
இந்நிலையில் பல கோடி பக்தர்களின் தியாகம் மற்றும் தவத்தின் பலனாய், பல தலைமுறைகளின் கனவு இன்று நிறைவேறி உள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை கூறிருப்பதாவது :
கோடான கோடி பக்தர்களின் தியாகம் மற்றும் தவத்தின் பலனாய், பல தலைமுறைகளின் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. புதிய வரலாறு எழுதப்பட்டிருக்கிறது.
புண்ணிய பூமியான அயோத்தியில், ஶ்ரீ பால ராமர் திருவுருவச் சிலை, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.
Also Read : https://itamiltv.com/rumor-spreading-whatsapp-universities-cm/
புனிதமான இந்த வைபவத்தை, சென்னை கோபாலபுரம் வேணுகோபால சுவாமி கோவிலில், பக்தர்களுடன் அமர்ந்து, பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பைக் கண்டுகளித்தோம்.
இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர்கள் வினோஜ் , சுமதி , மத்திய சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் கே.வி.ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர் என தனது ட்விட்டர் பதிவில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.