பாகிஸ்தானுக்கு சுற்று பயணம் வந்த இங்கிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. 17 வருடங்களுக்கு பின்னர் நடைபெறும் போட்டி என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் நிகழ்வாக பாகிஸ்தான் அணியை இங்கிலாந்து 3-0 என்ற கண்ணிக்கில் ஒயிட் வாஷ் செய்து தொடரை முழுமையாக வென்றது.
இந்த தோல்வியால் பாகிஸ்தான் அணி ஒரே வருடத்தில் தொடர்ச்சியாக 4 டெஸ்ட் போட்டிகளை தனது மண்ணில் இழந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டியில் தொடர் தோல்வியடைவது இது தான் முதன்முறை. மேலும் இந்த தொடரில் பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், ஷகீல் போன்ற ஓரிரு வீரர்கள் மட்டுமே சிறப்பாக ஆடினர்.
இந்த தொடர் தோல்வி எதிரொலியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெறுவது சந்தேகமாகியுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 7 வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இது போன்ற நிகழ்வால் அணியின் கேப்டன் பாபர் அஸ்ஸாம் தலைமை மீது அதிர்ப்தியும், விமர்சனமும் எழுந்துள்ளது. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து வந்த ரமீஸ் ராஜா அந்த பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் தொடர் தோல்வியின் எதிரொலியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் பாகிஸ்தான் தோல்வி பெற்றதும் ரமீஸ் ராஜா கேப்டன் பாபர் அசாமிடம் அணியின் பிரச்சனை குறித்தும், டெஸ்ட் போட்டியை அணி வீரர்கள் எதிர்கொள்ளும் முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுரையை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.