நாளை ரேசன் கடைகள் இயங்கும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு, இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் நடைமுறையில் இருந்தது.
அதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால், ரேஷன் கடைகள் வழக்கம் போல் நாளை செயல்படும் என உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து உணவு பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பொது வினியோக திட்டத்தின்கீழ் ஜனவரி 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்கள் பெறுவதற்காக நியாயவிலை கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது
வரும் ஞாயிறு அன்று தமிழகத்தில் ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும். இதற்கு பதிலாக பிப்ரவரி 26ம் தேதி நியாய விலை கடைகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இந்த வாரம் ஞாயிறு அன்று ரேஷன் கடைகள் உண்டு என்பதும் ரேஷன் அட்டைதாரர்கள் தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் பெறுவதற்கு ஏதுவாக நாளை நியாயவிலை கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டதால், ஜனவரி மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை பலரும் வாங்கவில்லை என கூறப்படுகிறது. இதனையொட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.