ITamilTv

நவம்பர் மாத வங்கி விடுமுறை நாட்கள் – 15 நாட்கள் வங்கிகள் இயங்காது.

Spread the love

அக்டோபர் மாதம் முடிவடைய உள்ள நிலையில், நவம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

ஆண்டின் ஒவ்வொரு மாதமும் முடிவடைவதற்கு முன்னதாக அடுத்த மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் குறித்த பட்டிட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. வங்கி வாடிக்கையாளர்கள் சிரமம் இன்றி முன்கூட்டியே வங்கி சேவைகளை திட்டமிட வசதியாக இதனை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் நவம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வரும் நவம்பர் மாதத்தில் வார இறுதி நாளான 4 ஞாயிற்றுகிழமைகள் மற்றும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் உள்பட மொத்தம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.

நவம்பர் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது என்பதை பார்க்கலாம்…!

நவம்பர் 1 புதன்கிழமை – கர்நாடகா, மணிப்பூர், இமாச்சல பிரதேசத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

நவம்பர் 5, – ஞாயிறு வார விடுமுறை
நவம்பர் 10 வெள்ளிக்கிழமை – மேகாலயாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
நவம்பர் 11, இரண்டாவது சனிக்கிழமை வார விடுமுறை
நவம்பர் 12, – ஞாயிறு வார விடுமுறை
நவம்பர் 13 திங்கட்கிழமை திரிபுரா, உத்தரகாண்ட், சிக்கிம், மணிப்பூர், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

நவம்பர் 14 செவ்வாய்கிழமை – குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, சிக்கிம் ஆகியவற்றில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
நவம்பர் 15 புதன்கிழமை – சிக்கிம், மணிப்பூர், உத்தரபிரதேசம், வங்காளம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
நவம்பர் 19, 2023 – ஞாயிறு வார விடுமுறை
நவம்பர் 20 திங்கட்கிழமை – பீகார் மற்றும் ராஜஸ்தானில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

நவம்பர் 23 செவ்வாய் – உத்தரகாண்ட் மற்றும் சிக்கிமில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
நவம்பர் 25, 2023 – நான்காவது சனிக்கிழமை வார விடுமுறை
நவம்பர் 26, 2023 – ஞாயிறு வார விடுமுறை

நவம்பர் 27 – திரிபுரா, மிசோரம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒரிசா, சண்டிகர், உத்தரகண்ட், ஹைதராபாத் – தெலுங்கானா, ராஜஸ்தான், ஜம்மு, உத்தரப் பிரதேசம், வங்காளம், மகாராஷ்டிரா, புது தில்லி, பீகார், ஜார்கண்ட், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
நவம்பர் 30 வியாழன் – கர்நாடகாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.


வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், யுபிஐ, மொபைல் பேங்கிங் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் சேவைகள் தொடரும். இந்த சேவைகள் விடுமுறை நாட்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
எனவே வங்கி விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு வங்கி சேவையினை மேற்கொள்ளுங்கள்..!


Spread the love
Exit mobile version