பேடிஎம் நிறுவனத்துக்குச் சொந்தமான பேடிஎம் பேமெண்ட் வங்கி (Paytm Payment Bank) பிப்ரவரி 29 முதல் வாடிக்கையாளர்களிடமிருந்து தொகை பெறுவதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
தற்போதுள்ள காலகட்டத்தில் நகரங்கள் முதல் கிராமங்கள் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரித்துவிட்டது.
இந்தியா முழுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக பேடிஎம் (Paytm) செயல்பட்டு வருகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு, புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொள்ள பேடிஎம் பேமெண்ட் பேங்க் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்!
இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் தணிக்கையாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், தொடர் விதி மீறலில் பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் (Paytm Payment Bank) ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, பேடிஎம் மீது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன் படி பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் சேவைக்கு தடை விதித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : நாவடக்கம் இல்லாத ஆ.ராசா : தேர்தலில் இதற்கான விளைவுகளை தி.மு.க. சந்திக்க நேரிடும் – ஓபிஸ்!
வரும் பிப்ரவரி 29ஆம் தேதி முதல் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் செயல்பாடு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபாஸ்டேக், ப்ரீபெய்டு வசதிகளை வழங்கவும் பேடிஎம் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பேடிஎம் வாலட்களில் ஏற்கனவே உள்ள தொகையை பயன்படுத்த தடை இல்லை.
இதுகுறித்து ரிசர்வ் வாங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் “சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையின் முடிவில், சில விதிமுறைகளை பே-டிஎம் பேமெண்ட் வங்கி நிறைவு செய்யாதது கண்டறியப்பட்டது.
இதையும் படிங்க : Interim Budget 2024 -”குடியரசுத் தலைவரின் உரை..”பாஜகவின் தேர்தல் பரப்புரை- கொதித்த திருமா..!
இதனையடுத்து, அந்த வங்கியிலுள்ள கணக்குகளில் வாடிக்கையாளர்கள் மேற்கொண்டு தொகை செலுத்துவதற்கும்,
இணைவழி பணப்பைகள், பாஸ்டாக், என்சிஎம்சி அட்டைகள் ஆகிவற்றில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துவதற்கும் பிப்ரவரி 29 முதல் தடை விதிக்கப்படுகிறது.
எனினும் பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கணக்கில் உள்ள தொகையை வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் தொடர்ந்து எடுக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.