தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் கட்டாய ஒப்பந்த பணிக்காலம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகில் இருக்கும் மகத்தான பணிகளில் ஒன்றான மருத்துவ படிப்பை படிக்க பலர் போட்டிபோட்டுக்கொண்டு தகுதி தேர்வை எழுதி வருகின்றனர் . பணம் இருப்பவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவர் படைப்பை மேற்கொள்கின்றனர் .
இந்நிலையில் மருத்துவ பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்களின் கட்டாய ஒப்பந்த பணிக்காலத்தை 2 ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைத்தது தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Also Read : அதானிக்கு எதிராக இந்தியாவில் நடவடிக்கை எடுக்காதது ஏன்..? – ராகுல் காந்தி காரசார கேள்வி
மேற்படிப்பு பயிலும் மாணவர்கள் 2 ஆண்டுகள் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்ற வேண்டும் என்ற விதியை தளர்த்த வேண்டும் என அரசு மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மருத்துவ பட்ட மேற்படிப்பு பயில்வோர், 2 ஆண்டுகள் பயிற்சி மருத்துவர்களாக பணி செய்ய வேண்டும் என விதி இருந்தது. இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில், அரசு சாரா மருத்துவர்களாக பணி செய்யும் மருத்துவர்களின் கட்டாய ஒப்பந்த பணிக்காலம் குறைக்கப்பட்டுள்ளது தற்போது பயிற்சி மருத்துவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.