மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற்றிருந்த ரீமல் புயல் தற்போது தீவிர புயலாக ( Remal storm ) வலுப்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது .
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற்று பின்னர் வடக்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக மாறி வங்கதேசம் நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ரீமல் புயல் தற்போது தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது வங்கக் கடலில் வடக்கு மற்றும் அதனையொட்டிய கிழக்கு மத்திய கடல் பகுதியில் புயல் நிலைகொண்டுள்ளது .
தீவிரப் புயலாக வலுப்பெற்ற நிலையில் ரீமல் புயல் அதி தீவிரப் புயலாக மேலும் தீவிரமடையும் ( Remal storm ) என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.